மணப்பாறை அருகே வீட்டினுள் நுழைந்த கொம்பேரி மூக்கன் பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்த தீயணைப்புத்துறையினர்.

மணப்பாறை அருகே வீட்டினுள் நுழைந்த கொம்பேரி மூக்கன் பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்த தீயணைப்புத்துறையினர்.;

Update: 2026-01-03 14:36 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புதியகாலனியில் வசித்துவரும் செந்தில்குமார் என்பவரது வீட்டில் இன்று பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதுகுறித்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற மணப்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக வீடு முழுவதும் தேடினர். இறுதியாக குளிர்சாதன பெட்டியின் பின்புறம் மறைந்திருந்த 5 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பை பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பிடித்து ஒரு சாக்கு பையில் போட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

Similar News