புத்தக கண்காட்சியில் முப்பெரும் விழா
குமாரபாளையம் புத்தக கண்காட்சியில் முப்பெரும் விழா நடந்தது.;
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பாக புத்தகத் திருவிழா நடக்கிறது. இதில் வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் சாவித்திரிபாய் பூலே பிறந்தநாள் முப்பெரும் விழாவாக, அமைப்பாளர் விடியல் பிரகாஷ் தலைமையில் நடந்தது. சௌடேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். இதில் பள்ளி மாணவ மாணவர்களுக்கு சிறுகதை எழுதுதல், கதை சொல்லுதல், பேச்சுப்போட்டி, வைக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு புத்தகங்கள் வழங்கப்பட்டது. புத்தகத் திருவிழாவில் மாணவ மாணவிகள் பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். ஜமுனா நன்றி உரையாற்றினர். புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து மாணவர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசு புத்தகங்கள் வழங்கப்படுகிறது. விழாவில் பாரதி பதிப்பகம் இளங்கோ, நியூ செஞ்சுரி புக் முத்துகிருஷ்ணன், ஏசுதாஸ், தீனா,தினக்கல்வி சசி,சுமதி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.