வெல்லும் தமிழ்நாடு மாநாடு: தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம்!
நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் டாக்டர்.குமரவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி கரூர் நகரில் வெல்லும் தமிழ்நாடு மாநாடு சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.;
நாமக்கல் தொகுதி தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் நாமக்கல் மாநகர செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மட்டும் பங்கு பெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் ,நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள வேலவன் காம்ப்ளக்ஸில்,நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் டாக்டர்.குமரவேல் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி 8ஆம் தேதி கரூர் நகரில் வெல்லும் தமிழ்நாடு மாநாடு சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது, கூட்டத்தில் மாநாடு களப்பணிகள், சுவர் விளம்பரங்கள், மாநாடு துண்டு பிரச்சாரங்கள், மக்கள் சந்திப்பு வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மற்றும் தற்போது நடைபெற்று வரக்கூடிய மாநாடு சம்பந்தமான களப்பணிகளை கூர்மைப்படுத்துவது போன்ற பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை நாமக்கல் மாநகர செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், மோகனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாநகரச் செயலாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில வணிகர் அணி செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். மாநகர துணைச் செயலாளர் குமார் நன்றி கூறினார்.