கண்ணமங்கலம் பேரூராட்சியில் தவெக கட்சியினர் ஆலோசனை கூட்டம்.

ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதில் பேசினார் மாவட்ட செயலாளர் சத்யா.;

Update: 2026-01-04 17:11 GMT
ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தில் மேற்குஆரணி ஒன்றிய தவெக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மேற்குஆரணி ஒன்றிய செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் சத்யா கலந்துகொண்டு தீவிர வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுவதில் நேரில் சென்று பார்வையிட்டு சரியான முறையில் வாக்காளர் சேர்க்கை நடைபெறுகிறதா என்றும், தவெக தலைவர் விஜய் கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இப்பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தினமும் 10 உறுப்பினர்களை சேர்க்க வேண்டியும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து பேசினார். மேலும் இதில் ஒன்றிய இணை செயலாளர் பழனி, பொருளாளர் ஐயப்பன், துணைச் செயலாளர்கள் கோபிகிருஷ்ணன், அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News