மஸ்ஜித் ரகுமான் பள்ளிவாசலில் கலந்தாய்வு கூட்டம்
மஸ்ஜித் ரகுமான் பள்ளிவாசலில் கலந்தாய்வு கூட்டம்;
புளியங்குடியில் தமுமுக டிரஸ்ட் கீழ் இயங்கும் மஸ்ஜித் ரகுமான் பள்ளிவாசலில் கலந்தாய்வு கூட்டம் மஸ்ஜித் ரகுமான் நிர்வாகிகள் மற்றும் புளியங்குடி தமுமுக நகர நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தமுமுக மாவட்ட மாநில நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளிவாசல் சம்பந்தமான ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்கள். தமுமுக துணை பொதுச்செயலாளர் மைதீன் சேட்கான் மாவட்டத் தலைவர் நயினார் முஹம்மது தமுமுக மாவட்ட செயலாளர் புளியங்குடி அப்துர் ரஹூமான் மமக மாவட்ட செயலாளர் சலீம் மாவட்ட பொருளாளர் கடையநல்லூர் முகம்மது பாசித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் முகமது அலி மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் மஜீத். தமுமுக புளியங்குடி நகரத் தலைவர் செய்யது அலி பாதுஷா உள்ளிட்ட நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.