பள்ளிபாளையத்தில் இரு நாட்கள் ஜோதிட திருவிழா நடைபெற்றது
பள்ளிபாளையத்தில் ஜோதிடர்கள் மாநாடு இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது;
உலக சமாதான மகரிஷி சேவா அறக்கட்டளையின் சார்பாக மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகத்தின் பயிற்சி மையம் இரண்டு நாள் ஸ்ரீ அஷ்டலட்சுமி ஜோதிட திருவிழா பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ஜோதிடர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜோதிடம் ஆன்மீகம் இணைந்த எம்.எம்.ஆன்மீக கலசம் மாத இதழ் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை காமாட்சிபுரி ஆதீனம் இரண்டாவது மகா சன்னிதானம் ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் மற்றும் யதார்த்த ஜோதிடர் ஷெல்வின் தாமு அவர்களும் தலைமை தாங்கினார்கள். விழா முன்னிலையாக மருதமலை குருஜி பொன்னையா சாமி அவர்களும், தங்கபாண்டியன் அவர்களும், அன்னதானம் பிரபு, பூபதி அவர்களும் சிறப்பு செய்தார்கள் நூற்றிக் கணக்கான ஜோதிடர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனத் தலைவர் டாக்டர் பி.ஏ.முகுந்தன் முரளி செய்திருந்தார். விழாவின் ஒருங்கிணைப்பாளராக டாக்டர் மணி, முருகேசன், லோகநாதன், ஆகியோர் செயல்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் இரண்டு நாள் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது ...