கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ், ஓய்வூதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இந்து மஸ்தூர் சபா தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவையின் தொழிலாளர் பேரவை சார்பில், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2026-01-05 16:18 GMT
கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ், ஓய்வூதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ராணிப்பேட்டை, ஜன. — இந்து மஸ்தூர் சபா தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவையின் தொழிலாளர் பேரவை சார்பில், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் எஸ். விஜயலட்சுமி தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் பேசும்போது, கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழர்களின் திருநாள் பொங்கல் போனஸாக ரூ.7,000 வழங்க வேண்டும், மேலும் மாதந்தோறும் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினார். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் வேலு முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தை சிறப்பித்தனர்.

Similar News