ஸ்கேட்டிங் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கம் வென்ற ராஜஸ்தானை சேர்ந்த மாணவன்

குளித்தலை அரசு கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் சார்பில் பாராட்டு;

Update: 2026-01-05 16:18 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு விலங்கியல் பாடபிரிவில் படித்து வரும் ஜெயபிரகாஷ் கொசைவால் 18 என்பவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஸ்ரீகிஷான் குளித்தலை ரயில் நிலைய மேலாளராக பணிபுரிந்து வருவதால் குளித்தலையில் தங்கி படித்து வருகின்றார். இவர் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு ஸ்கேட்டிங் கோச்சர்ஸ் அசோசியேசன் நடத்திய மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்று தங்கம் வென்றார். இதனை அடுத்து மாநில அளவிலான போட்டி காஞ்சி ஸ்போர்ட்ஸ் அகாடமி காஞ்சிபுரத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுதும் மாவட்ட அளவில் போட்டியிட்டு வெற்றி பெற்று தகுதி பெற்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியிலும் மாணவர் ஜெயபிரகாஷ் முதல் இடம்பெற்று தங்கம் வென்றார். மாநில அளவில் வெற்றி பெற்று தங்கம் வென்ற மாணவரை நேற்று கல்லூரி முதல்வர் சுஜாதா, விலங்கியல் துறை தலைவர் பாபுநாத், மின்னணுவியல் துறைப் பேராசிரியர் மகேந்திரன், வேதியியல் துறைத் தலைவர் பாலசுப்பிரமணியம், உடற்கல்வி இயக்குநர் பொறுப்பு பேராசிரியர் வைரமூர்த்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்தனர்.

Similar News