ஆதித்தமிழர் பேரவை சார்பில் கோரிக்கை
கடவூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த மாவட்ட ஆட்சியரிடம் மனு;
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சியில் 4000 க்கும் மேற்பட்ட வீடுகள் சுமார் 17,000 மக்கள் உள்ளனர். மேலும் இப்பகுதியில் பொன்னணி ஆறு அணை, தேவாங்கு சரணாலயம், வாழறும்பு சிற்று அருவி, இயற்கை வளம் நிறைந்த மலைகள், சுற்றுலாத் தலங்கள் உள்ளது. ஆகையால் கடவூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த கோரியும், மேலப்பகுதி ஊராட்சிக்கு உட்பட்ட விராலிப்பட்டியில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்து தர வேண்டி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கழிவுநீரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலில் மிதித்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. இந்த இரண்டு தீர்மானங்கள் முன் வைத்து ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பசுவை பெரு.பாரதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவாக அளித்துள்ளார்.