கரூரில் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கரூரில் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
கரூரில் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழகத்தில் விபத்துகளை குறைக்கவும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் ஆண்டுதோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர் மண்டலம் சார்பில் 39-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி கரூர் அரசு கலைக்கல்லூரியில் முடிவுற்றது. இந்த பேரணியில் இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் செல்லாதிருப்போம். சாலையில் போட்டி போட்டுக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம். குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம். செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்ட வேண்டாம். இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்துதான் ஓட்ட வேண்டும். சாலை விதிகளை மீறுவது இழிவான செயல் என எண்ண வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம். சாலை விதிகளை மதித்து விபத்தினை தவிர்ப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கரூரில் செயல்படும் தனியார் கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணாக்கர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர். இந்த நிகழ்வில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.