ராமநாதபுரம் திரைப்படகதாநாயகிவருகை

வேலு நாச்சியார் திரைப்பட கதாநாயகி ஆயிஷாதேசியத் தலைவர் பட கதாநாயகன் பஷீர் உடன் வந்தார்;

Update: 2026-01-06 08:13 GMT
ராமநாதபுரம் அரண்மனை ராணி இலக்குமி நாச்சியாரின் அழைப்பை ஏற்று வேலு நாச்சியார் திரைப்பட கதாநாயகியும்,அவரது குடும்பத்தாரும் ராமநாதபுரம் அரண்மனைக்கு வருகை தந்தார்கள்.அரண்மனைக்கு வருகை தந்த கதாநாயகி ஆயிஷாவிற்கு ராணி பட்டு மாலை அணிவித்து வரவேற்றார்.அவருடன் தேசியத் தலைவர் பட கதாநாயகன் பஷீர்,அவருடைய மனைவி பவானி,கதாநாயகியின் சாகோதரி பாஷினி,இவருடைய கணவர் லண்டன் ஜோஸ்வா, இப்படத்தின்பு திய இசையமைப்பாளர் சரவ் ஆகியோர் உடன் வந்தனர்.வேலு நாச்சியார் கதாநாயகி நமது நிருபரிடம் அளித்த பிரத்தியேகப் பேட்டியில் கூறியதாவது:-என் தந்தை பஷீர்,வேலு நாச்சியாரின் உண்மைக் கதையை திரைப்படமாக தயாரிக்க உள்ளோம் அதில் என்னை கதாநாயகியாக நடிப்பதற்கு என்னிடம் கேட்டுக் கொண்டார் அதன் அடிப்படையில் நான் நடித்துக் கொண்டிருக்கின்றேன் முதலில் நான் இந்த படத்தில் நடிப்பதற்கு அச்சமே இல்லை எனது தந்தையின் அரவணைப்பில் இந்த பிரபலமான படத்தில் நடித்து நடித்து வருகிறேன் இதில் வரும் குயிலி பாத்திரம் மிக மிக முக்கியமானது மிகவும் பிரம்மாண்ட தயாரிப்பில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன்.இந்த படமானது வெள்ளி விழா கொண்டாட்ட படமாக அமையும், அதற்கு ரசிகர்கள் சிறப்பான ஆதரவு தந்து திரைப்படத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.மேலும் அவரது தந்தையும்,தேசிய தலைவர் முத்துராமலிங்கத் தேவர் திரைப்படத்தின் கதாநாயகனுமான பஷீர் கூறியதாவது:-நான் வேலுநாச்சியாரின் திரைப்படத்தில் எனது மகளை கதாநாயகியாக நடிக்க வைப்பதில் பெருமைப்படுகிறேன்.இதனை அறிந்த ராமநாதபுரம் அரண்மனை ராணி லெக்குமி நாச்சியார், ராஜா கேபிஎம். நாகேந்திர சேதுபதி,அவரது மனைவி மருத்துவர்.சிந்து நாச்சியார் எங்களை ராமநாதபுரம் அரண்மனைக்கு வரச் செய்து,மரியாதை செய்தார்கள்.இதனை அடுத்து ராணி அவர்கள் எங்களுக்கு திரைப்படத்திற்குரியஅனைத்து உதவிகளையும் செய்வோம் என்று கூறினார்,அவர்கள் கூறியது எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.எங்களை வரவழைத்து மரியாதை செய்த அரண்மனை ராணி குடும்பத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறினார்.உடன் ராமநாதபுரம் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாரிமுத்து, திருப்பாலைக்குடி டூயட் பாபு உள்ளனர்.

Similar News