ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு

பொங்கல் திருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை வைத்துள்ளார்;

Update: 2026-01-06 08:18 GMT
பொங்கல் திருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை. பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரியும் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த மக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கோரிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது., என்னுடைய இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் பலரும் வெளிமாநிலங்களிலும் வெளியூர்களிலும் பணிபுரிவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பொங்கல் திருநாளுக்கு சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்கள் எளிதில் சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையிலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் கீழ்க்கண்ட ரயில்களை சிறப்பு ரயிலாக இயக்குவதத்திற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையிலிருந்து - இராமேஸ்வரம் இரு மார்க்கமும் விருத்தாச்சலம் வழியாக இரவு நேர விரைவு வண்டி இயக்க வேண்டும். சென்னையில் இருந்து மயிலாடுதுறை திருவாரூர் அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரையில் இரு மார்க்கமும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும். கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி திண்டுக்கல் வழியாக இராமேஸ்வரம், பெங்களுருவிலிருந்து கோவை, நாமக்கல், கருர், திண்டுக்கல் வழியாக இராமேஸ்வரம் கன்னியாகுமரியிலிருந்து இராமேஸ்வரம் பாலக்காட்டிலிருந்து இராமேஸ்வரம் சேலத்திலிருந்து ஈரோடு திருப்பூர் கோவை பழனி திண்டுக்கல் மதுரை வழியாக இராமேஸ்வரம் ஹைதராபாத்- இராமேஸ்வரம். உள்ளிட்ட வழித்தடங்களில் இரு மார்க்கமும் சிறப்பு ரயில்கள் இயக்கிடவும், சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் விரைவு வண்டிகளில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய செயலாளருமான கே நவாஸ்கனி எம்பி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News