ராசிபுரத்தில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு. நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாடி ஊர்வலமாக சென்றனர்...
ராசிபுரத்தில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு. நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாடி ஊர்வலமாக சென்றனர்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாநில கலை விழா மாநாட்டில், 1 கிலோ மீட்டர் தூரம் நாட்டுப்புற கலைஞர்கள், கரகாட்டம், தெருக் கூத்து, உடுக்கை, பம்பை, பஜனை, நையாண்டி மேளம், தப்பட்டை, சிலம்பம், கும்மியாட்டம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்... பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் சத்யராஜ், கூறியது.., இந்த மாநாட்டில், நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்படும் இலவச பேருந்து வசதி மற்றும் 500 பேருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றும், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள கால தாமதத்தை சரிசெய்து எளிமைப்படுத்த வேண்டும், ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் பல கலைஞர்கள் இறந்துவிட்டதாகவும், அரசு ஆடை ஆபரணங்கள் வாங்க வழங்கும் 10,000 ரூபாய்க்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. நாட்டுப்புற கலைஞர்களுக்கும் அரசு பேருந்தில் இலவச பயண அட்டை வாங்க வேண்டும். தமிழகத்தில் 10 லட்சத்திற்கு மேல் நாட்டுப்புற கலைஞர் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஆண்டுதோறும் நலிவுற்ற 500 கலைஞர்களுக்கு மட்டும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் அது போதுமானதாகாது, ஆண்டுதோறும் ஆயிரம் நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவி தொகை வழங்க அரசு முன் வர வேண்டும். பெண் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க அளவுக்கு எடுக்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர் எளிய முறையில் ஓய்வூதியம் பெற வழிவகை செய்ய வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. ஆகையால் மீனவர்களுக்கு வழங்கும் ஓய்வு இதயம் போல் நாட்டுப்புற கலைகள் இருக்கும் வேலை இல்லாத நாட்களில் மாதம் ரூ. 2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 10 லட்சம் குடும்பங்கள் நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளார்கள். நாட்டுப்புற கலைஞர்கள் ஒன்று இணைந்தால் மிகப்பெரிய புரட்சி ஏற்படும். கலைஞர் இல்லாத கிராமம் கிடையாது. நாங்கள் நினைத்தால் ஒரு ஆட்சியை வர வைக்க முடியும். ஆகவே அரசு நாட்டுப்புறக் கலைஞர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்...