இலொயோலா கல்லூரியில் தலைமைத்துவப் பண்புகள் பயிலரங்கு தொடக்கம்!!!

இலொயோலா கல்லூரியில் தலைமைத்துவப் பண்புகள் பயிலரங்கு தொடக்கம்!!!;

Update: 2026-01-06 10:23 GMT
ராசிபுரம் மெட்டாலாவில் உள்ள இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை வளர்க்கும் நோக்கில் தாட்கோ உதவியுடன் நான்கு நாள் பயிலரங்கு தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மெட்டாலா இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், “தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்வது” குறித்த பயிலரங்கு தாட்கோ உதவியுடன் 06ம் தேதி முதல் 09ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் கல்லூரி அதிபர் அருட்தந்தை முனைவர் தோமினிக் ஜெயக்குமார் சே.ச. அவர்கள், மாணவர்கள் எதிர்காலத்தில் திறமையான தலைவர்களாக உருவாக வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி செயலர் அருட்தந்தை முனைவர் டேனிஸ் பொன்னையா சே.ச. அவர்கள், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தலைமைத்துவப் பண்பு அச்சாணியாக விளங்குகிறது என ஆசியுரை வழங்கினார். முதல்வர் முனைவர் ஜா. ஜோஸ்ப்பின் டெய்சி அவர்கள், இளம் தலைமுறைக்கு தலைமைத்துவத் திறன்கள் இன்றியமையாதவை என எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புகழ்பெற்ற பேச்சாளர் கபிலா விசாலாட்சி (விஜய், சன் தொலைக்காட்சி) அவர்கள், கல்வியின் மேன்மை, புத்தக வாசிப்பின் அவசியம் மற்றும் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து, தாட்கோ உதவி மேலாளர் மாறன் (நாமக்கல்) அவர்கள் தாட்கோ திட்டங்கள் குறித்து விளக்கினார். இந்நிகழ்வை கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பயிலரங்கினை புலத்தலைவர்கள் பேராசிரியர் ராஜபிரபு மற்றும் ஜனனி ஜஸ்வர்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் அனைத்து மாணவர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Similar News