முயல் வேட்டைக்குச் சென்ற நரிக்குறவர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மேலும் சிறுவன் மருத்துவமனையில் அனுமதி அரக்கோணம் அருகே சோகம்
சமீப காலமாக உரிய எச்சரிக்கை மற்றும் அனுமதியின்றி இதுபோன்ற மின்வேலிகளால் பல விலை மதிப்பற்ற உயிர்கள் பறிபோவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்;
முயல் வேட்டைக்குச் சென்ற நரிக்குறவர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மேலும் சிறுவன் மருத்துவமனையில் அனுமதி அரக்கோணம் அருகே சோகம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தணிகை போளூர் பகுதியில் அமைந்துள்ள நரிக்குறவர் காலனி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் 30 இவர் நேற்று இரவு அருகிலுள்ள உளியம்பாக்கம் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சுந்தரப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் காட்டு பன்னிகளுக்காக வைக்கப்பட்டுள்ள மின்சார வேலியை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்ததை கண்ட அவருடன் சென்ற சூர்யா 12 என்ற சிறுவன் வெங்கடேஷை காப்பாற்ற முயன்ற போது அவருக்கும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. அதனைத் தொடர்ந்து உடன் சென்ற சந்தோஷ் 15 அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நரிக்குறவர் இன மக்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட இருவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் மேலும் சூர்யா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட அரக்கோணம் கிராமிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக உரிய எச்சரிக்கை மற்றும் அனுமதியின்றி இதுபோன்ற மின்வேலிகளால் பல விலை மதிப்பற்ற உயிர்கள் பறிபோவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே தமிழக அரசு இதுபோன்ற விபத்துக்களை தடுக்கும் வண்ணம் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்...