டிரினிடி கல்லூரி வளாகத்தில் நடைபெட்ற பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்ச்சி.

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறையின் சார்பில், கல்லூரி புத்தாக்க மையத்தின் பங்களிப்புடன் "புதுப்பிக்கத்தக்க மூலப் பொருட்கள் மேற்கொள்ளப்படும் ஆற்றல் உற்பத்தியின் எதிர்கால போக்குகள்" என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.;

Update: 2026-01-06 12:34 GMT

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் - தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் இணைப் பேராசிரியை நித்ய தர்ஷினி கலந்து கொண்டார். மேலும், திருச்சி - ஶ்ரீமத் ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் உதவிப்பேராசிரியர் ஆர். நிர்மல்குமார், தஞ்சாவூர் - பேராவூரணி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் உதவிப் பேராசிரியை ஆர். பூங்குழலி மற்றும் சேலம் - சங்ககிரி - ஶ்ரீ சண்முகா பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் இணைப் பேராசிரியர் சண்முகம் மாரிமுத்து ஆகியோர் பேசினர்.சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு என்பது சமுதாயத்திற்கு ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. நிலக்கரி மூலம் கிடைக்கும் மின்சார சக்தியை விட, சூரிய ஒளி, காற்று, நீர், போன்ற இயற்கை வளங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு வெகுவாக குறைகிறது. உலக வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம், இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துதல் போன்றவை சமுதாயத்தை மிகவும் பாதிப்படைய செய்கின்றன. இதனை நிவர்த்தி செய்தால் நம் எதிர்கால சந்ததியினர் பாதிப்படையாமல் இருப்பர் என இவர்கள் இந்நிகழ்வில் பேசினர்.நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், இயற்பியல் துறைத்தலைவர் பி. லட்சுமி, இத்துறை உதவிப் பேராசிரியைகள் பி. கவிதா, ஆர். சகுந்தலாதேவி, வீ. கலைவாணி, எஸ். சந்தியா, பி. கௌதமி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்பியல், வேதியியல் மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்.

Similar News