திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் குறளாசிரியர் மாநாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஆண்டும் குறள்வாரம் கொண்டாடப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவ்வறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு 2026ஆம் ஆண்டு சனவரி திங்களில் மாநிலம் முழுவதும் குறள்வார விழாவினை நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.;

Update: 2026-01-06 12:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று குறளாசிரியர் மாநாடு நடத்த தமிழ் வளர்ச்சித் துறை சார்பாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 15 ஆசிரியர்கள் (அரசு / அரசு உதவிபெறும் / அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்கள்), 15 அரசு ஊழியர்கள் (அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத்துறை / அனைத்து நிலை அலுவலர்கள் / ஊழியர்கள்) என மொத்தம் 30 நபர்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளலாம்.நாமக்கல் மாவட்டதில் 15 ஆசிரியர்கள் மற்றும் 15 அரசு ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு 09.01.2026 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நாமக்கல் மோகனூர் சாலையிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி (தெற்கு) கலையரங்கில் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் தேர்வு தொடங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு வருகை புரிய வேண்டும். தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள துலங்கல் குறியீடு (Q R Code) வழியாகப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யாதவர்கள் தேர்வு மையத்திற்கு நேரடியாக வந்து பதிவு செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



Similar News