பத்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு நில மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

குமாரபாளையத்தில் பத்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு நில மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2026-01-06 13:54 GMT
குமாரபாளையம் ராகவேந்திரா தெருவில் வசிப்பவர் சிவக்குமார், 60. கயிறு தயாரிக்கும் தொழில். இவர் செங்காடு பகுதியில் உள்ள 10 ஆயிரத்து 222 ச.அடி கொண்ட தன் நிலத்தை விலைக்கு கொடுப்பதாக, குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு பகுதியில் வசிக்கும் சக்திவேல், 56, என்பவருக்கு கொடுப்பதாக கூறியுள்ளார். இதனால் ஏப். 27ல், ஜெயராமன், ராஜேந்திரன் முன்னிலையில், சிவக்குமாருக்கு சொந்தமான அலுவலகத்தில் ரூபாய் 10 லட்சம் கொடுத்துள்ளனர். இதனை பத்திர தாளில் சிவக்குமார் கையொப்பம் போட்டு கொடுத்துள்ளார். கிரைய ஒப்பந்தம் படி, பலமுறை சிவக்குமார் வசம் கேட்டும் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பிறகு இதுகுறித்து விசாரணை செய்த போது, அந்த நிலம் சிவக்குமார் மனைவி மோகனகமலா பெயரில் உள்ளது தெரியவந்தது. இது பற்றி கேட்க போக, சிவக்குமார், சக்திவேலை தகாத வார்த்தை பேசியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து சக்திவேல், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

Similar News