ஆதியோகி சிவன் ரதம் ராசிபுரம் வருகை மகாசிவாராத்திரி குறித்து விழிப்புணர்வு...

ஆதியோகி சிவன் ரதம் ராசிபுரம் வருகை மகாசிவாராத்திரி குறித்து விழிப்புணர்வு...;

Update: 2026-01-06 16:45 GMT
கோவை ஈஷா மையம் சார்பில் பிப்.15-ல் நடைபெறும் மகாசிவராத்திரி விழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஆதியோகி சிவன் ரத ஊர்வலம் செவ்வாய்கிழமை ராசிபுரம் வருகை தந்தது. கோவை ஈஷா மையம் சார்பில் பிப்.15-ல் மகாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதனையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆதியோகி சிவன் ரத ஊர்வலம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு, சேலம், ஆத்தூர் வழியாக ஆதியோகி சிவன் ராசிபுரம் வருகை தந்தது. ராசிபுரம் பகுதியில் குருசாமிபாளையம், பிள்ளாநல்லூர், ராசிபுரம் பகுதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்காக ஆதியோகி சிவனுக்கு மேளதாளங்களுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் பங்கேற்று சிவனை வழிபட்டனர். மேலும் ராசிபுரம், பாலப்பாளையம் பகுதிகளில் தனியார் பள்ளி வளாகங்களிலும் மாணவ மாணவியர்களின் தரிசனத்திற்காக ரதம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News