ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்து விழிப்புணர்வு பேரணி.
ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகிற ஜன 9 அன்று மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான (0-18) மருத்துவ முகாம் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் வட்டார தொடக்கக்கல்வி அலுவலர் பூ.சாவித்ரி.;
ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகிற ஜன 9 அன்று மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான (0-18) மருத்துவ முகாம் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆரணி அரசினர் ஆண்கள்.மேல்நிலைப்பள்ளியில் வருகிற ஜனவரி 9 அன்று ஒரு வயது முதல் 18 வயது வரை மாற்றுத்திறனுடையவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை வட்டாரத் தொடக்க கல்வி அலுவலர் பூ.சாவித்திரி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆரணி நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் தலைமை தாங்கினார். அனைவரையும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயசீலி வரவேற்றார். மேலும் இதில் வட்டார தொடக்கக்கல்வி அலுவலர் மணிகண்டன், பள்ளி தலைமை ஆசிரியை வசந்தா, ஆசிரியப் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பேரணியாக கோட்டை மைதானம், பழைய பஸ் நிலையம், மார்க்கெட் ரோடு வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தனர். முடிவில் மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்பாளர் மணிக்குமார் நன்றி கூறினார்.