உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் ஆரணி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மடிகணினி வழங்கும் விழா. ஆரணி எம்.பி வழங்கினார்.

உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின்கீழ் ஆரணி அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றதில் ஆரணி எம்.பி, எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டு மடிகணினிகளை வழங்கினார்.;

Update: 2026-01-06 18:14 GMT
ஆரணி, உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின்கீழ் ஆரணி அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா செவ்வா்ய்கிழமை நடைபெற்றதில் ஆரணி எம்.பி, எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டு மடிகணினிகளை வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கான மடிக்கணினிகள் வழங்கும் உலகம் உங்கள் கையில் என்ற மாபெரும் திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிலையில் ஆரணி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பயிலும் 150 மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்கிழமை மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கல்லூரி டீன் ஜி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆரணி கோட்டாட்சியர் சீ.சிவா முன்னிலை வகித்தார். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிகணினிகளை வழங்கி பேசியது, தற்போழுது தொழில்நுட்ப வளர்ச்சி மிக பெரிய வளர்ச்சியடைந்து அனைத்து வசதிகளும், தகவல்களும் இணைய தள வாயிலாக கிடைக்கிறது. தமிழ்நாட்டு முதலமைச்சர் உத்தரவின் படி தற்போழுது வழங்கப்படும் மடிக்கணினியை கொண்டு தங்கள் திறன்களை வளர்த்து கொள்ள உதவிகரமாக இருக்கும். மேலும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன், ஆகிய திட்டங்கங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை மாணவ, மாணவியர்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு தங்கள் இலக்கை அடைய வேண்டும். மேலும் இந்த மடிகணினிகளை வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள் என்று பேசினார். இந்நிகழ்வில் ஆரணி வட்டாட்சியர் செந்தில், திமுக சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, மாவட்டதுணைசெயலாளர் ஜெயராணிரவி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, சுந்தர், மோகன், நகர பொறுப்பாளர் சைதை வ.மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News