உலகம் உங்கள் கையில்
உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் மூலம் விலையில்லா மடிகணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சந்தாவுடன் வழங்கி இன்று தொடங்கி வைத்தார்;
கல்லூரி மாணவர்களுக்கு "உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் மூலம் விலையில்லா மடிகணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சந்தாவுடன் வழங்கி இன்று தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி கலை கல்லூரி வளாகத்தில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாணவரணி சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் தலைமையில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, மாநகர மேயர் திலகவதி செந்தில் துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் KSC.இளையசூரியன் தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆ.கலைச்செல்வன் உள்ளிட்ட துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதியார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தனர்.