முதல்வர் வருகைக்காக பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் திரு.அன்பு ஹரிஹரன், மாநில செயற்குழு உறுப்பினர் திரு.பாலாஜி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி பொதுசெயலாளர்கள் திரு.செல்வகுமார், சூரியகுமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி திரு.பாலாஜி ஆகியோரைச் சட்டவிரோதமாக வீட்டுக் காவலில் வைத்துள்ளது இந்த விடியா அரசு. இதே போல தான் மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இளைஞரணி நிர்வாகிகளை வீட்டுக்காவலில் வைத்தது தி.மு.க அரசு. காவல்துறையைத் தனது ஏவல் துறையாக மாற்றி, ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குக் கடும் கண்டனங்கள்! கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவி. - Dr.SG சூர்யா மாநிலத் தலைவர், பா.ஜ.க இளைஞர் அணி.