கரூரில், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம். தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டம்.

கரூரில், r நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம். தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டம்.;

Update: 2026-01-07 07:43 GMT
கரூரில், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம். தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய திமுக அரசு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தது. ஆனால் தேர்தல் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழக அரசு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு சமஊதியம் வழங்கவில்லை. இதற்க்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசு செவி சாய்க்காததால் இன்று தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 13 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சங்கரேஸ்வரி தலைமையில் நான்காவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் வட்டார செயலாளர் ஷாலினி, கடவூர் வட்டார செயலாளர் சுரேஷ், அரவக்குறிச்சி வட்டார செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கிய ஊதியத்திற்கும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தில் ரூபாய் 3170 குறைவாக உள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக இதற்காக நாங்கள் போராடி வருகிறோம். ஊதியம் முரண்பாடுகளை களைவதற்காக 2023 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது தமிழக முதல்வர் மூன்று நபர் கொண்ட குழுவை அமைத்து மூன்று மாதத்தில் ஊதியம் உயர்த்தி வழங்குவதாக கூறியும் வழங்கவில்லை. இதனால் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 13-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எங்கள் கோரிக்கையை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

Similar News