தொழிலதிபர் எஸ்.வி.எஸ் ஜெயக்குமார் தேர்வு
தொழிலதிபர் எஸ்.வி.எஸ் ஜெயக்குமார் சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் கௌரவத் தலைவராக பொறுப்பேற்றார்.;
தொழிலதிபர் எஸ்.வி.எஸ் ஜெயக்குமார் சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் கௌரவத் தலைவராக பொறுப்பேற்றார். சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நுகர்வோர் நலன் கருதி விழிப்புணர்வு முகாம் நடத்துதல், பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கங்கள் நடத்துதல், பொதுமக்களிடம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை விழிப்புணர்வு செய்தல், பாதிக்கப்படும் நுகர்வோர்களுக்கு இலவசமாக வழக்கு நடத்துதல், இலவச சட்ட ஆலோசனை என பல்வேறு சமூக சேவை பணிகளை சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தி வருகிறார்கள், இந்தநிலையில் புதுக்கோட்டை தொழிலதிபர் எஸ்.வி.எஸ் ஜெயக்குமார் அவர்களை சங்கத்தின் கௌரவத் தலைவராக நியமனம் செய்து அவர்களுக்கு நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் மாநில தலைவர் வழக்கறிஞர் முனைவர் கு.ஜெகன், மாநில ஒருங்கிணைப்பாளர் முருகேசன், மாநில அமைப்பு செயலாளர் சிவசங்கர், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் புதுகை ஊடகன் பிரபு, மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.