பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டுபோட்டிகள்.

பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் தைப் பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது;

Update: 2026-01-07 15:34 GMT
திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மாண்புமிகு திரு.M.K.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க நாமக்கல் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி Bsc EX MLA. அவர்களின் வழிகாட்டுதலோடு ஒருங்கிணைந்த பள்ளிபாளையம் ஒன்றிய திமுக சார்பாக கிரிக்கெட், கோ-கோ, கபடி போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் .N.நாச்சிமுத்து பள்ளிபாளையம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் தளபதி R.செல்வம் அவர்கள், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் A.இளங்கோவன் ஆகியோரின் தலைமையிலும் , மாவட்ட அறங்காவலர் நியமனகுழு உறுப்பினர் S.N.சௌந்தரம் அவர்களின் வரவேற்புரையுடன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் M.R.ராஜேந்திரன் S.ராஜ் மேட்டுக்கடை S.கார்த்திக் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.K.முரளி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கோப்பையும் மற்றும் பரிசுத்தொகையும் வழங்கி சிறப்பித்தனர்... மேலும் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கு பெறுவார்கள் . மேலும் இந்நிகழ்வில் SRK மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் விழா ஏற்பாட்டளர்கள் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் T.சிலம்பரசன் அவர்கள், வடக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்.A.விஜயகுமார் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்........

Similar News