கடையநல்லூர் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கிய நகராட்சி சேர்மன்

கடையநல்லூர் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா;

Update: 2026-01-08 06:44 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மசூதுதைக்கால் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை வகித்து மாணவ மற்றும் மாணவியருக்கு விலையில்லா மிதி வண்டியினை வழங்கினார் உடன் பள்ளியின் தாளாளர் பட்டத்து சாஹிப் ஹாபிழ் மௌலவி உ மு செ ஹசன் மக்தூம் ஆலிம் சாஹிப் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிக்கந்தர் ரஹிமான் உதவி தலைமை ஆசிரியர்கள் முகமது மசூது, ஹபீபுல்லாஹ் மற்றும் ஆசிரியர்கள் நகர் மன்றத் தலைவர் அவர்கள் 11 ஆம் பயிலும் 69 மாணவர்கள் மற்றும் 87 மாணவிகளுக்கு என மொத்தம் 156 இலவச மிதிவண்டியினை வழங்கி சிறப்பித்தார்கள். 17வது வார்டு நகர மன்ற உறுப்பினர் நிலோபர் அப்பாஸ் மற்றும் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமார் மற்றும் முருகானந்தம் மற்றும் மாணவச் செல்வங்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

Similar News