சாம்பவர்வடகரையில் பொங்கல் தொகுப்பு துவக்கி வைத்த பேரூராட்சி மன்றத் தலைவர்

சாம்பவர்வடகரையில் பொங்கல் தொகுப்பு துவக்கி வைத்த பேரூராட்சி மன்றத் தலைவர்;

Update: 2026-01-08 08:39 GMT
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழ்கிறோம் என பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து பேசினார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் கொண்டாட ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் ரூபாய் 3000 வழங்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் முத்து தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நாலாயிரம் என்ற பாப்பா,கவுன்சிலர்கள் சுடலை முத்து,முத்துலட்சுமி,ரபீக் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூராட்சி தலைவர் சீதாரலட்சுமி முத்து கலந்து கொண்டு ரூபாய் 3000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி பேசியதாவது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதுமைப் பெண்கள் திட்டம்,தமிழ் புதல்வன் திட்டம்,லேப்டாப் வழங்கும் திட்டம், மாடல் பள்ளி திட்டம்,காலை உணவு திட்டம் என கல்விக்காக அறிவிக்கும் ஒவ்வொரு திட்டமும் தமிழகத்தை தலைநிமிரச் செய்யும் திட்டமாக உள்ளது. அதேபோல் வேலைக்கு செல்லும் பெண்களுக்காக விடியல் பயணத் திட்டம், இல்லத்தரசிகளுக்காக மாதம் தோறும் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், முதியவர்களுக்காக வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை மற்றும் இல்லம் தேடி மருத்துவம், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் திட்டங்களால் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் தலை நிமிர்ந்து, தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகை செய்கிறது.அனைத்து குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளை கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 3000 வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி என பேசினார்.நிகழ்ச்சியில் முன்னாள் பேரூர் செயலாளர் ராமச்சந்திரன், சந்திரன்,மாணிக்கம்,முத்துக்குமார், பட்டு முத்து,சாமி தேவர்,பரமசிவன், சங்கர் ராமன்,ஐயப்பன்,வேல் தேவர்,அணைந்த பெருமாள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிறைவாக கூட்டுறவு செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்

Similar News