இலவசவேட்டி சேலை உற்பத்தி ஆண்டு முழுவதும் வேண்டும். உற்பத்தியில் வெளிப்படை தன்மை வேண்டும். திருச்செங்கோட்டில் நடந்த காங்கிரஸ் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டத்தில்கோரிக்கை
விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி ஆண்டு முழுவதும் வேண்டும்.உற்பத்தியில் வெளிப்படை தன்மை வேண்டும். உற்பத்தி செய்தவர்களுக்கு 3 ஆண்டாக நிலுவையில் உள்ள தொகை மற்றும் சீருடை உற்பத்தி செய்தவர்களுக்கு 6 ஆண்டு நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். என தமிழ்நாடு அரசுக்கு காங்கிரஸ் நெசவாளர் அணிகோரிக்கை;
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்செங் கோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெசவாளர் அணி மாநில துணைத் தலைவர் டி.ஏ. கதிரேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் தேவராஜன் மாநில பொருளாளர் என்.காவேரி மாநில நிர்வாகி டி.ஆர்.கோதண்ட ராமன், காங்கிரஸ் கட்சி நாமக்கல் மாவட்டத் தலைவர் சர்வேயர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராககாங்கிரஸ் கட்சியின் மாநில நெசவளார் அணித் தலைவர் G.N. சுந்தரவேல் கலந்து கொண்டார் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, நாமக்கல் மாவட்ட பொது செயலாளர் நந்தகோபால், மாவட்ட பொருளாளர் TST. பொன்னுசாமி, Ex மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, மற்றும்சிவாஜி சேகர் தியாகராஜன் மயில்சாமி மாவட்ட நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, முன்னாள் மாவட்ட தலைவர் நவீத், பொன்முடி ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில நெசவளார் அணித் தலைவர் G.N. சுந்தரவேல் கூறியதாவது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு கருதி விலை இல்லா வேட்டி திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப் பட்டது ஆனால் அந்த திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் வேலை வழங்கப் படுவதில்லை. இரண்டு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது அந்த நிலையை போக்கி ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குகின்ற வகையிலே உற்பத்தி திட்டம் வழங்க வேண்டும். உற்பத்தி திட்டமானது வெளிப்படை தன்மையாக வழங்கப் படுவதில்லை. அது அனைத்து பகுதிகளிலும் புகாராக இருந்து வருகிறது. உற்பத்தி திட்டம் வழங்கப்படும் போது வெளிப்படை தன்மையாக வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளாக நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. சீருடை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட துணிகளுக்கு ஆறாண்டுகளாக நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது எனவே இதையெல்லாம் உடனடியாக தமிழக அரசு கலைய வேண்டும் அரசே கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்குவதன் மூலமாக நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கூட்ட முடியும். எனவே வேட்டி வேலைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் .அடுத்து அனைத்து நெசவாளர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகையாகவும் உதவித்தொகையாகவும் மருத்துவ பயன்பாடு என்பது வசதி படைத்தவர்களுக்கு இருக்கின்ற ஒரு மருத்துவ பயன்பாடு போல ஒவ்வொரு எளிய மக்களுக்கும் அதே ரீதியாக மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும். அடுத்து ஆண்டு முழுவதும் ரிபேட் தள்ளுபடி தள்ளுபடி என்பது இப்போது 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது மேலும் 60 வயதை கடந்த அனைத்து நெசவாளர்களுக்கும் மாத ஓய்வூதியமாக ரூபாய் 3000 வழங்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசையும் தமிழக முதல்வர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம். என கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை எங்கள் தலைவர் முடிவு செய்வார். அவர் யாருடன் கூட்டணி என அறிவிக்கிறாரோ அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என கூறினார்.