மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி முடிவடைந்து, மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் நடைபெற்று வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரி பார்க்கும் பணி முடிவடைந்ததையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.;
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, ஆயத்த பணியில் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியினை (First Level Checking of EVMs-VVPATs) மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 11.12.2025 அன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடங்கப்பட்டது.அதன்டி, நாமக்கல் மாவட்டத்தில் 2433 கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit) 5,779 வாக்குப் பதிவு கருவிகள் (Ballot Unit) மற்றும் 2,590 வாக்குப் பதிவை சரிபார்க்கும் கருவிகள் (VVPATs) ஆக மொத்தம் 10,802 வாக்கு பதிவு கருவிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தின் பொறியாளர்கள் மூலம் முதல் நிலை சரிபார்ப்பு பணிக்கு உட்படுத்தப்பட்டு, தற்பொழுது பணிகள் முடிவடைந்துள்ளது.அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மாதிரி வாக்குப்பதிவினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.