திருச்செங்கோடு தோக்கவாடி பகுதியில் மாட்டினை ஏற்றிக்கொண்டு வந்த வேன் கவிழந்த விபத்தில்வேனை ஓட்டி வந்தவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம்ஒப்பிடாமங்கலம்,மாமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சுரேஷ்மாட்டு வியாபாரி ஈரோடு சந்தைக்கு சரக்கு வேனில்மாட்டை ஏற்றி வந்த போதுமாடு மிரண்டதால் வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு;

Update: 2026-01-08 15:16 GMT
கரூர் மாவட்டம் ஒப்பிடாமங்கலம்,மாமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சுரேஷ் வயது( 36) விவசாயம் செய்து கொண்டு மாடுகள் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். நேற்று கரூரிலிருந்து ஒரு மாட்டை விற்பதற்காக திருச்செங்கோடு அடுத்த கருங்கல்பாளையம் சந்தைக்கு தனது டாடா ஏஸ் வேனில் மாட்டை ஏற்றிக்கொண்டு சுரேஷ் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடி புதிய ரிங்ரோடு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது வண்டியில் இருந்த மாடு திமிர வண்டி கட்டுப்பாடு இழந்து சரிந்தது. இதில் கீழே விழுந்த சுரேஷ் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News