கடவூர் அருகே ரசாயன கழிவுகளை கொட்டி செல்லும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரசாயன கழிவுகளை ஊற்றியதால் துர்நாற்றம் ஏற்பட்டு புற்கள்,மரங்கள் கருகி வருவதோடு மட்டுமில்லாமல் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து உள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்;

Update: 2026-01-08 16:14 GMT
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா மேலப்பகுதி ஊராட்சி கருங்கல்பட்டி மற்றும் விராலிப்பட்டி இடையே தனியாருக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலம் உள்ளது. இந்த தரிசு காட்டில் கருங்கல்பட்டி மற்றும் விராலிப்பட்டி கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்க்கும் பொதுமக்கள் தங்களது ஆடுகள்,மாடுகள் போன்ற கால்கடைகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கருங்கல்பட்டி -விராலிப்பட்டி இடையே உள்ள தனியாருக்கு சொந்தமான தரிசு காட்டில் இரவு நேரத்தில் டேங்கர் லாரியில் மர்ம திரவர பொருளைகளை கொண்டு வந்து ஊற்றி சென்று வருகின்றனர் இதனால் அந்த தரிசு காட்டில் ஊற்றிய மர்ம திரவரப்பொருளை ஊற்றிய இடங்களில் இருந்த மரங்கள், செடிகொடிகள்,புற்கள் அனைத்தும் கருகிவிட்டது. மேலும் மர்ம கழிவு நீர் பட்டுள்ள இடங்களின் அருகில் உள்ள புற்களை ஆடுகள் மேய்ந்து உள்ளது. இந்த புற்களை மேய்ந்த 30க்கும் மேற்பட்ட ஆடுகளும் இறந்து உள்ளது இதேபோல் அந்த பகுதியே துர்நாற்றம் ஏற்பட்டு நோய் தொற்று பரவும் சுழல் இருந்து வருகிறது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோல் மர்ம திரவரப்பொருளை ஊற்றிய இடங்களில் போதிய மழை பெய்தும் புற்கள் உள்பட எந்த செடிகொடிகளும் முளைக்காமல் காய்ந்த நிலையிலேயே உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் கால்நடைகளை மாற்று இடங்களில் மேய்த்து வருகின்றனர்.மேலும் இந்த மர்ம திரவரப்பொருட்களால் குடிநீர் மாசும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த பகுதியில் நோய் தொற்று ஏற்படுமோ என்றும் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் மர்ம திரவரப்பொருட்கள் ஊற்றி இடங்களில் கருகிய நிலையில் செடிகொடிகள் மரங்கள் அனைத்தும் காய்ந்து வருவதோடு,மேலும் அதே இடங்களில் மீண்டும் புற்கள் செடிகொடிகள் மற்றும் மரங்கள் முளைத்து வராமல் துற்நாற்றம் ஏற்பட்டு வருவதால் இப்பகுதி பொதுமக்கள் இடையே தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இதுகுறித்து சிந்தாமணிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர் எனவே மேலப்பகுதி ஊராட்சி கருங்கல்பட்டி-விராலிப்பட்டி இடையே உள்ள தரிசு காட்டில் டேங்கர் லாரியில் கொண்டு வந்து மர்ம திரவரப்பொருளை ஊற்றிய நபர்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து, மர்ம நபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,இதேபோல் மர்ம திரவரப்பொருட்கள் குறித்து அந்த பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் மண்களை ஆய்வு செய்து கிராம மக்களுக்கு தெளிவு படுத்துவதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News