கடவூர் பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி வழங்கினார்;
கரூர் மாவட்டம்,கடவூர் வடக்கு ஒன்றியம் மஞ்சாநாயக்கன்பட்டி மற்றும் கடவூர் தெற்கு ஒன்றியம் மாவத்தூர்,கடவூர் மேற்கு ஒன்றியம் தரகம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.3000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு செங்கரும்பு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி சேலையும் வழங்கி பொதுமக்களுக்கு கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி தமிழர் திருநாளான பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசு தொகுப்புகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கடவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம்,கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர்,ஒன்றிய துணை செயலாளர் குமரேசன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி பாலு மற்றும் பொதுவினியோக திட்ட துணை பதிவாளர்,கூட்டுறவு சங்க துணை பதிவாளர்,கழக நிர்வாகிகள், பொதுமக்களை என ஏராளமானோர் கலந்து கொண்டனர்