ஆரணி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் பொங்கல் வைத்து நூதன போராட்டம்.

ஆரணி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பொங்கல் வைத்து நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2026-01-08 17:18 GMT
ஆரணி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பொங்கல் வைத்து நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.3000 அறிவித்திருப்பதை உயர்த்தி ரூ.20ஆயிரம் வழங்கக்கோரியும், நெல் கொள் முதல் விலையை உயர்த்தி தரக்கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுததி ஆரணி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு தமிழக விவசாய சங்கம் சார்பில் பொங்கல் வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News