வேளாங்கண்ணியில் திமுக சார்பில் பெண்களுக்கான கபடி போட்டி.

வேளாங்கண்ணி;

Update: 2026-01-09 06:08 GMT
நாகை:தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுகழகம் சார்பில் கீழையூர் கிழக்கு ஒன்றியம் வேளாங்கண்ணி பேரூரில் பேருர் செயலாளர் மரிய சார்லஸ் தலைமையில் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவரும், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் முன்னிலையிலும் ,பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா,மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் கமல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். திராவிட பொங்கல் சமுக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம் மகளீர் கபடி போட்டி போட்டி 08/01/2026 காலை 10:00 மணியளவில் வேளாங்கண்ணி ஒன்றிய ,பேரூர் திமுகழக அலுவலகத்தில் நடைபெற்றது 18 முதல் 25 வயது வரை உள்ள மகளிர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு ஒன்றிய கழகம் சார்பில் முதல் பரிசு ரூ:10,000/-,மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு ரூ:7,000/-மற்றும் கோப்பை மூன்றாம் பரிசு ரூ:5,000/-மற்றும் கோப்பை,,நான்காம் பரிசு 3,000/- வழங்கப்பட்டது நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,விளையாட்டு அணி நிர்வாகிகள்,விளையாட்டு வீரரங்கனைகள் பங்கேற்றனர்

Similar News