சர்வதேச சதுரங்க போட்டியில் புதுக்கோட்டை மாணவர் சாதனை
சர்வதேச சதுரங்க போட்டியில் புதுக்கோட்டை மாணவர் சாதனை;
புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் முகமது இமான் 1 .12. 2025. முதல் 6.1.2026. வரை சதுரங்க போட்டியில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன. .இத்தாலி மற்றும் குரோசியா ஜெர்மனியில் நடைபெற்று முடிந்த சர்வதேச சதுரங்க விளையாட்டுப் போட்டியில் மூன்று போட்டியிலும் முதல் மற்றும் இரண்டாம் இடமாக தொடர்ந்து வெற்றி பெற்று மொத்தமாக ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பரிசுத்தொகை வென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அந்த வீரரை பள்ளியின் செயலர் மதிப்பிற்குரிய திரு ராஜ்குமார் விஜயகுமார் தொண்டைமான் அவர்கள் வாழ்த்தினார். பள்ளியின் தலைமையாசிரியர் திரு சித சேகர் அவர்களும் ஹட்சன் செஸ் அகடாமி பயிற்சியாளர்கள் ஜி எம் விஷ்ணு பிரசன்னா புதுக்கோட்டை எஸ் எஸ் அகாடமி பயிற்சியாளர் அங்கப்பன் மற்றும் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் நல்லாசிரியர் க முத்துராமலிங்கம் தந்தை பீர்முகமது தாய் தீபா நெல்சன் ஆகியோர் உடன் இருந்தார்கள். ...