ஜேடர்பாளையத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்.
ஜேடர்பாளையம் தனியார் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமை தி.மு.க பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி ஆய்வு செய்தார்.;
பரமத்தி வேலூர், ஜன.9: பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றி யம் ஜேடர்பாளையத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை பரமத்தி வேலூர் முன்னாள் எம். எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான கே.எஸ்.மூர்த்தி தொடங்கி தொடங்கி வைத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பயனாள களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் பூங்கொடி நாமக்கல் மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் குணசேகரன், கபிலர்மலை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் சரவணக்குமார், கபிலர்மலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி சுப்பிரமணியம், கபிலர்மலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி, மாவட்ட பொறியாளர் அணி தலைவர் அருண், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜெகதீசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செவன் ஸ்டார் மோகன், ஒன்றிய தி.மு.க. பொருளாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.