துவரங்குறிச்சி அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை.
துவரங்குறிச்சி அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை.;
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அய்யனார், வல்லடியான் திரு கோவிலில் அமைந்துள்ளது.கோவிலின் உள்ளே இருந்த உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த சில்லறை காசு மற்றும் பணத்தினை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இதுகுறித்து கோவில் பூசாரி மணி துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்தக் கோவிலில் உண்டியல் மூன்றாவது முறையாக கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.