அய்யர்மலை சாலையில் கார் மோதி முதியவர் படுகாயம்

குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை;

Update: 2026-01-09 16:17 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கபிள்ளை 65. இவர் நேற்று தனது பதிவு எண் இல்லாத டிவிஎஸ் 50 வாகனத்தில் அய்யர்மலை சாலையில் சென்றுள்ளார். அப்போது பின்னால் முத்துக்குமார் ஒட்டி வந்த கார் மோதியதில் சங்கபிள்ளை கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News