'டெலிவரி பாய்' திரைப்படத்தின் மூலம் அரிதாரம் பூசி அவதாரம் எடுத்தார் நாமக்கல் எம்பி!-இன்று சனிக்கிழமை மதியம் டீசர் வெளியீடு!
இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நாமக்கல் கே.எஸ். தியேட்டரில் ஜனவரி 10 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது.;
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், எம்பி திரைப்பட நடிகராக அரிதாரம் பூசி அவதாரம் எடுத்துள்ளார் அவர் நடிப்பில் உருவான 'டெலிவரி பாய்' படத்தின் டீசர் இன்று வெளியாகிறது..கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்துவரும் வி.எஸ். மாதேஸ்வரன், 2024 பாராளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.பிரபல பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநா யகனாக நடிக்கும் 'டெலிவரி பாய்' என்ற படத்தை வெண்ணிலா கபடிக் குழு இயக்குநர் சுசீந்திரனின் உதவி இயக்குநர் நானி என்பவர் இயக்கி உள்ளார்,கதாநாயகியாக பிரிகிடா நடிக்கிறார்.இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நாமக்கல் கே.எஸ். தியேட்டரில் ஜனவரி 10 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் அரிதாரம் பூசி நடிகராக அவதாரம் எடுத்து நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இதுகுறித்து மாதேஸ்வரன் எம்பி கூறுகையில்....அரசியலுக்கு வருவதற்கு முன்பே எங்களது பொட்டணம் கிராமத்தில் நடைப்பெறும் மாரியம்மன் கோவில் திருவிழாவில் மேடை நாடகங்களிலும், திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களிலும் நடித் துள்ளேன்.திரைப்படங்களில் நடிக்க சிறு வயதில் இருந்தே ஆர்வம் உண்டு. அந்த வகையில் டெலிவரி பாய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் 20 நிமிடம் வரும் வகையிலான காட்சியில் நடிக்க அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு நடித்தேன்.இதில், நடிகை ராதிகா சரத்குமார் ,போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற மார்ச் மாதம் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.