வெங்கமேடு-பூட்டிய அறைக்குள் மாட்டிக்கொண்ட குழந்தை. உடனே மீட்டெடுத்த தீயணைப்பு நிலைய வீரர்கள்.

வெங்கமேடு-பூட்டிய அறைக்குள் மாட்டிக்கொண்ட குழந்தை. உடனே மீட்டெடுத்த தீயணைப்பு நிலைய வீரர்கள்.;

Update: 2026-01-10 05:51 GMT
வெங்கமேடு-பூட்டிய அறைக்குள் மாட்டிக்கொண்ட குழந்தை. உடனே மீட்டெடுத்த தீயணைப்பு நிலைய வீரர்கள். கரூர் மாவட்டம் வெங்கமேடு செங்குந்த நகர் மூன்றாவது கிராஸ் பகுதி சேர்ந்தவர் உமாபதி -மல்லிகா தம்பதியினர். இவர்களது இரண்டு வயது மகன் கிருத்திக். இன்று அவர்களது வீட்டின் மாடியில் உள்ள அறையில் விளையாண்டு கொண்டிருந்தபோது அரை கதவு தானாக தாளிட்டுக் கொண்டது. பூட்டிய அறைக்குள் குழந்தை மாட்டிக்கொண்டதால் பெற்றோர்கள் மீட்க முடியாமல் தவித்தனர். உடனடியாக கரூர் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலில் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள் பூட்டிய கதவை திறக்கும் டோர் ஓபனர் கொண்டு இரண்டே நிமிடத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதனால் பெருமூச்சு விட்ட பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தங்களது குழந்தையை பத்திரமாக மீட்டு கொடுத்த தீ தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

Similar News