சுரண்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுரண்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி;

Update: 2026-01-10 06:44 GMT
சுரண்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் ஆலங்குளம் வட்டார போக்குவரத்து அலுவலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி தலைமை வகித்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார் அரசு போக்குவரத்து கழக சமய காப்பாளர் கோவிந்தராஜ், முகவர் குமார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்களும், பின் இருக்கையில் இருந்து பயணிப்பவர்கள் 2 பேரும் தலைகவசம் அணிய வேண்டும். கட்டு பாடான வேகத்தில் செல்ல வேண்டும். முன்னால் செல்கின்ற வாகனங்களைக் கடக்கும் பொழுது ஒரு மீட்டர் தூரம் தள்ளி செல்ல வேண்டும் எந்த சூழ்நிலையிலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். சாலையில் தார் ரோட்டில் இருந்து மன்சாலையில் இறங்கும் பொழுது தார் சாலையின் உயரத்தையும் மணல் அளவையும் கணித்து வாகனம் சறுக்கி விடாமல் தார்சாலைக்கு செங்குத்தாக இறங்க வேண்டும். கார்களில் பயணிப்பவர்கள் அனைவரும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். வாகனத்தில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே விபத்தின் போது காற்று பைகள் விரிவடைந்து இருக்கையில் அமர்ந்துள்ள நபரை முழுமையாக காப்பாற்ற முடியும். ஓட்டுநர்கள் போதிய ஓய்வின்றி தொடர்ச்சியாக வாகனத்தை ஓட்ட வேண்டாம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு நோட்டீங்களை பேருந்து ஓட்டுநர்களுக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் விநியோகம் செய்தனர்

Similar News