அமெரிக்க ஏகாதிபத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுள்ளது. வெனிசுலா நாட்டின்மீது அமெரிக்கா படையெடுத்து அந்நாட்டு அதிபர் மதுரா மற்றும் அவர் மனைவியை கடத்தி கொண்டு சென்று சிறைவைத்துள்ளனர். வெனிசுலா இனி எங்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார். வெனிசுலாவில் தனியார் சொத்துக்கள் மற்றும் எண்ணை வயல்கள் அரசுடமையாக்கப்பட்டு விட்டது. சாதாரண மக்களுக்கான ஆட்சி அங்கு நடந்துவருகிறது. அந்நாட்டின் எண்ணை வளத்தை தன்வசப்படுத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்துவருகிறது. அமெரிக்காவின் பாசிச நடவடிக்கையை இந்திய பிரதமர் கண்டிக்கவில்லை. வெளியுறவு துறை அமைச்சகம் ஒப்புக்கு சப்பானியாக வெறுமனே கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அமெரிக்க அரசை கண்டித்து, அதிபர் டிரம்ப் அவர்கள் உருவ பொம்மையை எரித்து இன்று ( 10.01.26 ) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகப்பட்டினம், அவுரித்திடலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருள்தாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதிபாசு, பொருளாளர் பிரகாஷ், இந்திய மாணவர் சங்க செயலாளர் முகேஷ் கண்ணா, இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட தலைவர் சிவன் அருள் செல்வன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் அ.தி.அன்பழகன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு உறுப்பினர்கள் சுந்தர், விஜயகுமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் உருவப்படத்தை எரித்தனர் நகரச் செயலாளர் வெங்கடேசன் நன்றி உரையாற்றினார். நாகை மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி