நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை உலகுக்கு பறைசாற்றும் உன்னதமான இந்த பொங்கல் விழாவில்
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தின் பொங்கல் திருவிழா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்;
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் பொறியியல், மருந்தியல், பாலிடெக்னிக், கல்வியியல், உடற்கல்வியியல் மற்றும் வேளாண்மை கல்லூரிகளின், சார்பாக தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, 10-01-2026 அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்க்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் த அ.சீனிவாசன் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார், அப்பொழுது அவர் பேசியதாவது: “நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை உலகுக்கு பறைசாற்றும் உன்னதமான இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். நமது கல்விநிறுவனங்கள் சிறந்த தரமான கல்வியை வழங்கும் மையங்களாக மட்டுமின்றி, நமது கலாச்சாரத்தின் ஆணி வேர்களை பாதுகாத்து அதை வளர்க்கும் இடமாகவும் உள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களுக்கு அப்பால், பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் புரிந்துகொள்வது மிக அவசியம். 'அறுவடைத் திருவிழா' என்றும் அழைக்கப்படும் இந்த பொங்கல் விழா இயற்கை நமக்கு அளித்த கொடைக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் கடின உழைப்பு, பொறுமை மற்றும் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை இது நமக்குக் கற்றுத்தருகிறது. தமிழர்களாகிய நாம் வீரமும் விவேகமும் நிறைந்தவர்கள், நம்முடைய இளைஞர்களின் திறன்கள், உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. நம்முடைய தமிழர்கள் உலகில், பல்வேறு துறைகளில் தலைமை பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பது மிகவும் பெருமைப்படவேண்டிய விஷயமாகும். மாணவர்களாகிய நீங்கள் என்றும் நமது பண்பாடு கலாச்சாரத்தை கைவிடக்கூடாது, அதேவேளையில் நாம் நம்மை எவ்வளவு விரைவில் புதிய தொழிநுட்பங்களுக்கு தயார்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் புத்திசாலித்தனத்தின் உண்மையான அர்த்தம் ஆகும். எனவே, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை விவசாயத்துறையில் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கி வறுமையில்லா, வளமான மனித சமுதாயத்தை உருவாக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பாரம்பரியமும், நவீனத்துவமும் தழைத்தோங்கும் நமது கல்விநிறுவனங்களில். சாதி, மதம், இனம், மொழி, நிறம்,, ஏழை, பணக்காரன் ஆண், பெண், மாநிலம், நாடு என்ற எந்த பாகுபாடின்றி நாம், தமிழர்களாய் ஒன்றுகூடி பொங்கல் விழாவை கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை நம் வாழ்வில் செழுமையையும், மகிழ்ச்சியையும், புதிய நோக்கத்தையும் கொண்டு வரட்டும்” இவ்வாறு அவர் பேசினார். இந்த திருவிழாவில், அன்னமழகி, அறுபதாங்குறுவை, பூங்கார், முற்றுசன்னம் குழியடிச்சான், குள்ளங்கார், மைசூர்மல்லி , குடவாழை, காட்டுயாணம், காட்டுப்பொன்னி கருப்பு சீரகசம்பா, கட்டிச்சம்பா, குருவிக்கார், வரப்புக் குடைஞ்சான், குறுவை களஞ்சியம் கம்பஞ்சம்பா, பொம்பி, காலா நமக், அனந்தனூர் சன்னம், பிசினி, வெள்ளைக் குருவிக்கார், விஷ்ணுபோகம் (19) மொழிக்கருப்புச்சம்பா, காட்டுச்சம்பா கருங்குறுவைதேங்காய்ப்பூ சம்பா காட்டுக் குத்தாலம் சேலம் சன்னா பாசுமதி புழுதிக்கார் பாலகுடவாழை, வாசைன சீரகச்சம்பா, கொசுவக்குத்தாளை, இலுப்பைப்பூ சம்பா, துளசிவாசக்சீரகசம்பா, சின்னப்பொன்னி, சிகப்புக்கவுணி, கொட்டாரச்சம்பா, சீரகசம்பா, கந்தசாலா, பனங்காட்டு, குடவாழை சன்னச்சம்பா, இறவைப்பாண்டி, செம்பிளிச்சம்பா நவராகருத்தக்கார், கிச்சலிசம்பா, கைவரச்சம்பா, சேலம்சன்னா, தூயமல்லி, வாழைப்பூசம்பா, தங்கசம்பா, நீலச்சம்பா, மணல்வாரிகருடன்சம்பா, கட்டைச்சம்பா ஆத்தூர் கிச்சலி, குந்தாவி சிகப்பு, குருவிக்கார், கூம்பாளை, கூல்லரகன்கௌனி, பூவன்சம்பா, முற்றின் சன்னம், சண்டிக்கார், கருப்புகவுணி, மாப்பிள்ளைசம்பா மடுமுழுங்கி, ஒட்டடையான் வாடன் சம்பா, சம்பா மோசனம், கண்டவாரிச் சம்பா வெள்ளை மிளகு சம்பா, காடைக்கழுத்தான், நீலஞ்சம்பா, ஜவ்வாதுமலை நெல் வைகுண்டா கம்பக்கார் கலியன்சம்பா, அடுக்கு நெல் செங்கார், ராஜமன்னார் முருகன் கார், சொர்ணவாரி சூரக்குறுவை, வெள்ளைக்குடவாழ, சூலக்குணுவை, நொறுங்கன் பெருங்கார் பூம்பாளை, வாலான் கொத்தமல்லிச்சம்பா, சொர்ணமசூரி பயகுண்டா பச்சைப் பெருமாள் வசரமுண்டான், கோணக்குறுவை, புழுதிக்கார் கருப்புப் பாசுமதி, வீதிவடங்கான் போன்ற பாரம்பரிய நெல் வகைகள் காட்சிபடுத்தபட்டன. மேலும் வாள் சுழற்றுதல், சிலம்பாட்டம், புலியாட்டம், பரத நாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் உழவர்களை பெருமை படுத்தும் விதமாக மாட்டுவண்டியின் உருவத்தை 3D முறையில் உருவாக்கி காட்சிபடுத்தியிருந்தனர்.