புகையில்லா நகராட்சியாக மாற்ற ஆணையர் வேண்டுகோள்

குமாரபாளையத்தில் போகிப்பண்டிகையில் புகையில்லா நகராட்சியாக மாற்ற ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்;

Update: 2026-01-10 12:42 GMT
. குமாரபாளையம் நகராட்சி ஆணையர் ரமேஷ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு போகிப்பண்டிகையை புகையில்லா போகியாக கொண்டாடும்படி அறிவித்துள்ளது. இதனால் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜன 12முதல் ஜன 14 வரை காலை 08:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தங்களுக்கு தேவையில்லாத பொருட்களை ஆங்காங்கே தீயிட்டு கொளுத்தாமல், வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் அல்லது சின்னப்பநாயக்கன்பாளையம், மணிமேகலை தெரு ஆகிய இடங்களில் உள்ள சேகரிப்பு மையங்களில் நேரடியாக கொடுத்து, நமது நகரை காற்று மாசு படுவதிலிருந்து பாதுகாத்திடவும், நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Similar News