குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
பாரம்பரிய உடை அணிந்து மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்;
தைப்பொங்கலாம் தமிழர் திருநாளை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி முதல்வர் சுஜாதா தலைமையில் இன்று நடைபெற்றது. இதனை ஒட்டி கல்லூரி முகப்பில் மாணவிகள் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வைத்து கொண்டாடினர். இதனை ஒட்டி மாணவ மாணவியர்கள் அனைவரும் தமிழர் பண்பாட்டு அடிப்படையில் மாணவர்கள் வேஷ்டி அணிந்தும், மாணவிகள் சேலை அணிந்தும் வருகை புரிந்து தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு, இயற்பியல் துறை தலைவர் ராமநாதன், தமிழ்துறை தலைவர் ஜெகதீசன், வணிகவியல் துறை தலைவர் பெரியசாமி, தாவரவியல் துறைத் தலைவர் வேணுகோபால், விலங்கியல் துறை தலைவர் பாபுநாத், வேதியியல் துறை தலைவர் பாலசுப்பிரமணி, உணவு மற்றும் ஊட்டச்சத்துவவியல் துறை தலைவர் மகேந்திரன், கணிதத்துறை தலைவர் உமாதேவி, வரலாற்று துறை தலைவர் வைரமூர்த்தி, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் சரவணகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாட்டினை செய்து சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.