எக்ஸல் கல்வி நிறுவனங்களில் பொன்னிழல் பொங்கல் கொண்டாட்டம்
குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் கொண்டாடிய பொன்னிழல் பொங்கல் விழா..;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களில் பொங்கல் தினவிழாவை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா "பொன்னிழல் பொங்கல் கொண்டாட்டம் - 2026" கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் பேராசிரியர் முனைவர் ஏ.கே.நடேசன் மற்றும் துணைத்தலைவர் மருத்துவர் ந.மதன்கார்த்திக் மற்றும் எக்ஸல் பப்ளிக் பள்ளியின் இயக்குனர் திருமதி.கவியரசிமதன்கார்த்திக் ஆகியோர் தலைமையேற்று பொங்கல் விழாவினை துவக்கிவைத்து சிறப்பித்தனர், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் ந செங்கோட்டையன், தொழில்நுட்ப வளாக செயல் இயக்குனர் கே.பொம்மண்ணராஜா, எக்ஸல் பொறியில் கல்லூரியின் டீன்கள் அன்புகருப்புசாமி, கார்த்திகேயினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவானது எக்ஸல் கல்வி நிறுவனங்களில் அமைப்பெற்றுள்ள எக்ஸல் பொறியியல் கல்லூரி தன்னாட்சி, எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி, எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி, எக்ஸல் கல்வியியல் கல்லூரி, எக்ஸல் பார்மசி கல்லூரி, எக்ஸல் பிசியோதெரபி மற்றும் ஆராய்ச்சி மையம், எக்ஸல் இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ், எக்ஸல் சித்த மருத்துவக்கல்லூரி, எக்ஸல் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி, எக்ஸல் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி, எக்ஸல் செவிலியர் கல்லூரி மற்றும் எக்ஸல் பப்ளிக் பள்ளி ஆகிய கல்வி நிறுவன வளாகங்களில் சிறப்பாக கொண்டாடப்பெற்றது இவ்விழாவில் மாணவ,மாணவிகள் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து கல்லூரி வாரியாக பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தமிழர் பன்பாட்டை போற்றும் விதமாக கிராமிய பாடல், நடனம், கரகாட்டம், புலி ஆட்டம் மற்றும் மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஆகியன இடம்பெற்றன, அத்துடன் உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பொங்கல் விழாவினை விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர், மேலும் நிகழ்வின் சிறப்பம்சமாக எக்ஸல் கல்வி நிறுவன நிறுவனத்தலைவர் முனைவர் ஏ.கே.நடேசன் மற்றும் துணைத்தலைவர் மருத்துவர் ந.மதன்கார்த்திக் ஆகியோர் ரேக்ளா மாட்டு வண்டியில் சவாரி செய்து மாணவர்களிடையே பொங்கல் கொண்டாட்டத்தித்தினை பகிந்துகொண்டனர், அத்துடன் கிடாரி ஆடுகளின் ஆட்டு சண்டை ஆகியன இடம்பெற்று பொங்கல் கொண்டாட்டத்தித்தினை மேலும் சிறப்புற செய்தது, இதில் அனைத்து கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.