காங்கேயத்தில் கோயில் பூட்டை உடைத்து வேல் திருட்டு

காங்கேயத்தில் கோயில் பூட்டை உடைத்து வேல் மற்றும் ஆம்ளிபிளேயர் மர்ம நபர்களால் திருடப்பட்டது;

Update: 2026-01-10 13:51 GMT
காங்கேயம் திருப்பூர் ரோடு பகுதியில் சிவசக்தி விநாயகர் கோயில் உள்ளது, அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். நேற்று பூசாரி ரமேஷ்,65, கோவிலில் பூஜை செய்துவிட்டு கோயிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று காலை கோவிலில் வந்து பார்த்தபோது முன் கதவு பூட்டை உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த செம்பு வேல் மற்றும் ஆம்ளிபிளேயர் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Similar News