நாமக்கல் தாலுக்கா புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல்!

சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து மத புகைப்பட கலைஞர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.;

Update: 2026-01-10 14:25 GMT
நாமக்கல் தாலுக்கா வீடியோ & போட்டோ சங்கத்தின் சார்பாக நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ மஹால் மண்டபம் வளாகத்தில் சமத்துவ பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அனைத்து மத புகைப்பட கலைஞர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இதில் சட்டி உடைத்தல், இசை நாற்காலி , லெமன் ஸ்பூன் , கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து பொங்கலிட்டனர், வந்திருந்த அனைவருக்கும் பொங்கல் மற்றும் செங்கரும்பு வழங்கப்பட்டது.இந்த விழாவில் அச் சங்கத்தின் கௌரவத் தலைவர் நித்தியானந்தம், தலைவர் அர்ஜுனன், பொருளாளர் சுரேஷ், செயலாளர் பெரியண்ணன்,துணைத் தலைவர் சீனிவாசன்,சங்க ஆலோசர்கள் அம்மன் குமார், ராஜ்குமார். மற்றும் மக்கள் தொடர்பாளர் ஸ்ரீதர்,இணை செயலாளர்கள் மற்றும் மத நல்லிணத்துற்காக. சாதிக் பாட்ஷா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் புகைப்பட கலைஞர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Similar News