பல்லடத்தில் காவல் துறையினர் புதிய ஸ்கேனர் கண்காணிப்பு கேமரா சிஸ்டம் திறப்பு விழா
பல்லடத்தில் காவல் துறையின் சார்பில் புதிய ஸ்கேனர் கண்காணிப்பு கேமரா சிஸ்டம் திறப்பு விழா!!;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர காவல்துறை,போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து மட்டும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அதிநவீன ANPR எனப்படும் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா கட்டுப்பட்டு அறை திறப்பு விழா பல்லடம் சரக உதவி ஆணையர்.சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. பல்லடத்தை சுற்றிலும் இதுவரை 2500 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் பல்லடம் சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்லடம், காமநாயக்கன்பாளையம்,அவிநாசி பாளையம், பல்லடம்,பொங்கலூர் உள்ளிட்ட சரக காவல் நிலைய பகுதிகளுக்கு தெருவுக்குத் தெரு கிராமத்துக்கு கிராமம் சிசிடிவி கேமராக்கள் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 2500 க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தற்போது பல்லடமே குற்றமற்ற நகரமாக மாறி உள்ளது.அதனை தொடர்ந்து பல்லடம் தற்போது முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் எந்த தெருவில் என்ன நடந்தாலும் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்பு கேமராவில் காட்சிகளில் பதிவாகி ரோந்து பணியை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும்,அதேபோல தற்போது பல்லடம் நான்கு வழி சாலை சந்திப்பு மற்றும் காரணம்பேட்டை பகுதியில் ஆட்டோமேட்டிக்காக வாகனங்களின் எண் ஸ்கேன் செய்யும் ANPR எனப்படும் அதிநவீன கேமரா தற்போது பொருத்தப்பட்டு குற்றவாளிகள் தப்பிக்க முடியாத நிலையை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.